ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் காரை ஓட்டிச் சென்ற நபர், காரை அனைவர் மீதும் மோதி, கடைகளையும் இடித்து சேதப்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் கார்கள், பைக்குகள், பழக்கடை சேதமடைந்தன. மேலும், இருவர் காயமடைந்தனர். அருகே இருந்த போலீசார் அதனை வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார். மேலும் காரை ஓட்டி வந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.