கமுதி: கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு

0பார்த்தது
கமுதி: கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மற்றும் சிவமணிகண்டன் என்ற இரு கல்லூரி மாணவர்கள், அதே கல்லூரியில் படிக்கும் திருமூர்த்தி என்பவருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக புதன்கிழமை கல்லூரிக்குள் புகுந்த கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். காயமடைந்த இருவரும் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கமுதி போலீஸார், முத்துக்குமார், முகேஷ் கண்ணன் உள்ளிட்ட 5 பேர் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி