இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான பகுதி என்றும், இது சர்வதேச பிரச்சனை என்பதால் இது குறித்து வேறு கருத்து கூற முடியாது என்றும் தெரிவித்தார். இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இழுவை படகில் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகவும், இலங்கை மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி மீன்களை அள்ளிச் செல்வதாகவும், இதனால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.