கச்சத்தீவு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

5பார்த்தது
இலங்கை - இந்திய பக்தர்களின் உறவு பாலமாக விளங்கும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா, இன்று மாலை 4 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் மற்றும் இந்திய பங்கு தந்தைகள் இணைந்து அந்தோணியார் திருவுருவம் பொறித்த கொடியை ஏற்றினர். இந்த நிகழ்வில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி