ராமேஸ்வரம்: உலக நன்மை வேண்டி நடைபெற்ற லட்சாா்ச்சனை

65பார்த்தது
ராமேசுவரம் மேலவாசல் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் உலக நன்மை வேண்டி லட்சார்ச்சனை நடைபெற்றது. இதை மணியக்காரர் எம். எஸ். முத்துகிருஷ்ணன் ஐயர் தொடங்கி வைத்தார். ஸ்ரீ பாலசுப்பிரமணியருக்கு பால், பழம், பன்னீர், திருநீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனை நடைபெற்றது. பாம்பன் சுவாமிகள் மெய்யடியார் சி. பி. கோபால் தலைமையில் மகா கும்பமேளா புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. இதில், திரளான முருக பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி