மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா, மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பட்டணம்காத்தான் பாரதி நகரில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன் தலைமையில், மாவட்ட இணைச் செயலர் கவிதா சசிகுமார், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலர் ரத்தினம் முன்னிலையில், மேற்கு ஒன்றிய செயலர் ஆர்.ஜி. மருதுபாண்டியன் மற்றும் அதிமுகவினர் ஜெயலலிதா உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அம்மா பேரவை துணைச் செயலர் சேது பாலசிங்கம், மாணவரணி துணைச் செயலர் செந்தில் குமார், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலர் முனியசாமி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.