மண்டபம் வடக்கு பகுதி விசைப்படகுகளுக்கு இன்று (டிச. 30) மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படும். கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தவறாமல் உயிர்காப்பு மிதவை, உயிர்காக்கும் சட்டை போன்ற தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விசைப்படகு பதிவு சான்றிதழ், மீன்பிடி உரிமச் சீட்டு, ஆதார் அட்டை முதலிய ஆவணங்களை தவறாமல் உடன் எடுத்துச் செல்லுமாறு மீன்வளத்துறை அறிவித்துள்ளது.