மண்டபம் சக்தி வடிவேல் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா

91பார்த்தது
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் காந்திநகரில் உள்ள ஸ்ரீ சக்தி வடிவேல் முருகன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா இன்று (மே. 29) காலை 7:10 முதல் 7:30 மணிக்குள் நடைபெற்றது. சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி