இலங்கையின் மன்னார் பகுதியிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை மரைன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் இலங்கை மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த சூசை தாசன் என்பது தெரியவந்தது. அவர் கடல் வழியாக இலங்கையிலிருந்து தப்பி வந்துள்ளார்.