இளையோர் நலன் மற்றும் விவகார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் மை பாரத் கேந்திராவின் கீழ், மேரா யுவ பாரத் மையம் ராமநாதபுரம் மாவட்டத்திலும் செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆதித்ய சந்த்ரம் கூறுகையில், மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தேசிய சேவைப் பணியாளர் இருவர் இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் ஒரு கிராமத்திற்கு ஒரு இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்களை உருவாக்கி, உறுப்பினர்களை தேச கட்டமைப்பில் ஈடுபடுத்துவார்கள்.