போக்குவரத்து துறையின் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 34 வழித்தடங்களில் 51 புதிய பேருந்துகள் இயக்குவதற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் புதிய விரிவான மினிபஸ் திட்டத்தை துவக்கி வைத்து ஆணையினை வழங்கினார்: -ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 16.05.2025 இன்று போக்குவரத்து துறையின் மூலம் புதிய விரிவான மினிபஸ் திட்ட துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமப்புற மக்கள் எவ்வித சிரமமின்றி பயன்பெறும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவான போக்குவரத்து திட்டத்தினை துவக்கி வைத்து விரிவாக்கம் செய்யப்பட்டது. வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புதிய விரிவான மினிபஸ் திட்டத்தில் புதிய பேருந்துகளை இயக்குவதற்கான 34 வழித்தடங்களில் 51 புதிய பேருந்துகளை இயக்க ஆணையினை வழங்கி துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், ராமநாதபுரம் நகர் மன்ற துணைத் தலைவர் பிரவீன்தங்கம், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.