ராமேஸ்வரம் அருகே வேர்க்கோடு பகுதியில் முத்துராமலிங்கத் தேவரின் சிலை திறப்புவிழா கடந்த அக்டோபர் 26 அன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நவம்பர் 3 அன்று ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, முத்துராமலிங்க தேவரின் திரு உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் ராமேஸ்வரம் துணைச்சேர்மன் மற்றும் முன்னாள் சேர்மன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.