இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 800-க்கும் மேற்பட்ட மீனவப் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த ஒரு நாள் வேலைநிறுத்தத்தால் சுமார் ரூ. 6 கோடி முதல் ரூ. 7 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.