ராமநாதபுரம் முத்துப்பேட்டை அருகே சாலை வலசையில் நேற்று முன்தினம் (நவ.11) இரவு தனியார் பள்ளி பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் பெரியபட்டினத்தை சேர்ந்த சீனி அமானுல்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த வடிவேல் பலத்த காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் மதுரை கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து திருப்புல்லாணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.