ராமநாதபுரத்தில் ரயில் மோதி ஒருவர் பலி

0பார்த்தது
திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற ரயில் இன்று ராமநாதபுரம் ரயில் நிலையத்தை அடைந்தபோது, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் மோகன் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.