பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப். 6 ஆம் தேதி தமிழகம் வருகிறார். முன்பாக 5 ஆம் தேதி இலங்கை செல்லும் பிரதமர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்து பாம்பன் வருகிறார். புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சிக்குப் பின் ராமேஸ்வரத்திற்கும் பிரதமர் செல்கிறார்