நவம்பர் 7 அன்று, பாம்பன் பாலத்தின் புதிய செங்குத்து தூக்கு பாலம் மற்றும் பழைய தூக்கு பாலம் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, விசைப்படகுகள் வடக்கு கடல் பகுதியிலிருந்து தென்கடல் பகுதிக்கு அணிவகுத்துச் சென்றன. பின்னர், இந்திய கடலோர காவல் படையின் ரோந்துக் கப்பல் வடக்கு பகுதியிலிருந்து தென்கடல் பகுதிக்குச் சென்றது.