சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம் அச்சத்தில்மக்கள்

0பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிர்ப்புறம் உள்ள மின்கம்பம் அடிப்பாகத்தில் சேதமடைந்து, சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. பலத்த காற்று வீசினால் மின்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்படும் என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி