இராமநாதபுரம் - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், குறிப்பாக பெருங்குளம், பட்டினம்காத்தான், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இரவு நேரங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, நேற்று இரவு நகராட்சி ஊழியர்கள் நதிப்பாலத்தில் இருந்து அழகன்குளம் செல்லும் சாலையில் மாடுகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கை பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எடுக்கப்பட்டுள்ளது.