ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதிகளில் மீன், ஆடு மற்றும் கோழி இறைச்சி விலையில் ஏற்றம் காணப்படுகிறது. சீலா மீன் ஒரு கிலோ 900 ரூபாய்க்கும், கொடுவா மீன் 550 ரூபாய்க்கும், பாறை மீன் 500 ரூபாய்க்கும், நகரை மீன் 300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆட்டுக்கறி ஒரு கிலோ 900 முதல் 1000 ரூபாய் வரையிலும், பிராய்லர் கோழி 290 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.