ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் நகரில் மீன், ஆடு, கோழி இறைச்சி ஆகியவற்றின் விலை நிலவரம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சீலா மீன் ஒரு கிலோ 850 ரூபாய்க்கும், கொடுவா மீன் ஒரு கிலோ 400 ரூபாய்க்கும், பாறை மீன் 400 ரூபாய்க்கும், நகரை மீன் ஒரு கிலோ 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆட்டுக்கறி ஒரு கிலோ 900 ரூபாய் முதல் 950 ரூபாய் வரையிலும், பிராய்லர் கோழி கிலோ 230 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி 400 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.