டிட்வா புயலைத் தொடர்ந்து இலங்கைக்கு நிகரான அளவில் இராமேஸ்வரம் தீவு பகுதியில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி, சுற்றுலா, தென்னை–மல்லிகை தொழில்கள், விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் உடனடி மீட்பு மற்றும் சரிசெய்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பதைக் கோரி, ராமேஸ்வரத்தில் படகு விடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.