மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதைக் கண்டித்தும், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) சார்பில் இன்று ராமேஸ்வரத்தில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பிருந்து மீனவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் அனைத்துத் துறை தொழிலாளர்கள் ஊர்வலமாகச் சென்று ரயில் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.