ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஆட்டோக்களில் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, ராமர் பாதம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று சுற்றிப் பார்த்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆட்டோக்களில் பயணம் செய்து சுற்றிப் பார்த்த பின்னர் ஆட்டோ ஓட்டுநர்கள் பேசிய பணத்தைக் கொடுக்காமல் குறைவாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடுத்த புகார் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுனர்கள் இரண்டு பேரைக் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். அதேபோல் ஆட்டோ ஓட்டுனர்கள் கொடுத்த புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அனைத்துக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி மீதும் காவல்துறையினர் தகாத வார்த்தைகளால் பேசி ஒருதலைப்பட்சமாகச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.