CPI-M, CPI சார்பில் இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்.

0பார்த்தது
ராமேஸ்வரத்தில், விலைவாசி உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மோடி அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. NSK வீதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா குழு உறுப்பினர் A. அசோக் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா துணை செயலாளர் G. பாண்டி தலைமை தாங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் V. காசிநாத துரை மற்றும் தாலுகா செயலாளர் G. சிவா ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும், மாவட்ட செயற்குழு உறுப்பினர் க. கருணாகரன், மாவட்ட குழு உறுப்பினர் A. ஆரோக்கிய நிர்மலா மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி