மக்கள் குறை தீர் நாள் கூட்டம்: 317 பேர் மனு

1பார்த்தது
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு, குடிநீர் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 317 பேர் மனுக்களை அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் புகாரி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி, மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி