ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியர், பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.