வருவாய் துறை ஊழியர்கள் பணிக்கு வராததால் பொதுமக்கள் அவதி

342பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்காக வந்த பொதுமக்கள், வருவாய்த் துறையினர் விடுப்பு எடுத்ததால் அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அலுவலகத்திற்கு வெளியே எந்த அறிவிப்பும் இல்லாததால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். இதுபோன்ற சமயங்களில் முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.