ராமேஸ்வரம், பாம்பன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.13) அதிகாலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், தற்போது அக்னி தீர்த்த கடற்கரை, திட்டக்குடி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது பெய்த மழையால் அப்பகுதியில் குளிர்ந்த சூழ்நிலை நிலவுகிறது.