ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் அதன் சுற்றுவட்டார கடலோரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று, நவம்பர் 22 ஆம் தேதி விடியற்காலை முதல் மழை தொடர்வதால், சாலைகளில் மழைநீர் வழிந்தோடுகிறது. இதனால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.