டிட்வா புயலால் ராமேஸ்வரம் தீவு முழுவதும் இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. கனமழை பெய்து இரண்டு நாட்கள் ஆகியும் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் பள்ளிக்கு வந்த மாணவிகள் மழைநீரில் நடந்து சென்று அவதிக்குள்ளாகினர்.