ராமநாதபுரம்: சுற்றுலா வாகனம் கவிழ்ந்து 16 பேர் பரிதாபம்

0பார்த்தது
ராமநாதபுரம்: சுற்றுலா வாகனம் கவிழ்ந்து 16 பேர் பரிதாபம்
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே புதன்கிழமை, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியின்போது, மணல் ஏற்றிச் சென்ற லாரி மீது சுற்றுலா வேன் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 16 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சத்திரக்குடி போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் ராமநாதபுரத்தில் சாமி கும்பிட்டுவிட்டு மதுரைக்கு திரும்பி சென்றவர்கள் என்று தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி