ராமேஸ்வரம் கிழக்கு தெருவில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களை, அப்பகுதியைச் சேர்ந்த மாருதி என்பவர் மது போதையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த தொழிலாளர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்கியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.