ராமநாதபுரத்தில் பரபரப்பு; கோயிலை இடிக்க முயற்சி

62பார்த்தது
ராமநாதபுரம் அரண்மனை அருகே முகவை ஊரணி கரையில் உள்ள பழமையான ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவிலை, நீதிமன்ற உத்தரவின்படி நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி கொண்டு இடிக்க முயன்றனர். இதை எதிர்த்து பொதுமக்களும் பக்தர்களும் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டதால் இடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி