இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில் இருந்து ரெகுநாதபுரம் செல்லும் வழியில், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நம்பியான் வலசை பேருந்து நிறுத்தத்தில் மோதி விபத்துக்குள்ளானது. சாலையின் குறுக்கே சைக்கிள் குறுக்கிட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.