ராமநாதபுரம்: பறக்கும்படை சோதனை.. எஸ்.பி அதிரடி ஆய்வு

0பார்த்தது
ராமநாதபுரம்: பறக்கும்படை சோதனை.. எஸ்.பி அதிரடி ஆய்வு
ராமநாதபுரம் மாவட்ட எல்லையான கமுதி அருகேயுள்ள கானாவிலக்கு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்களின் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். விருதுநகர்-ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் உள்ள கானாவிலக்கு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வின்போது, கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேசன், கமுதி காவல் ஆய்வாளர் மற்றும் எஸ்.பி. தனிப் பிரிவு காவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி