ராமநாதபுரம் அருகே 5 ஏக்கர் நிலம் தொடர்பாக போலியான ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததாக, வெளிப்பட்டினம் சார்பதிவாளர் ராமநாதன், பத்திர எழுத்தர் அயூப்கான் ஆகியோரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த நிலத்திற்கு கூட்டுப் பட்டா இருப்பது போல் போலியாக நகல் தயாரித்து, தானப்பத்திரம் எழுதி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே, மே 21 அன்று வேறு ஒரு லஞ்ச வழக்கில் சார்பதிவாளர் ராமநாதன் மற்றும் பத்திர எழுத்தர் அயூப்கான் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.