இராமநாதபுரம் மாவட்டம், பெருங்குளம் அடுத்துள்ள சேர்வைகாரன் ஊரணி பகுதியில் மதுரை-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஜூன் 09) இரவு கடுக்காவலசையில் இருந்து இராமநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது இராமநாதபுரத்தில் இருந்து பாம்பன் நோக்கி சென்ற ஷேர் ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோவில் பயணித்த மூவர் படுகாயங்களுடன் இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்