ராமநாதபுரம் மாவட்டத்தில் மே 19 முதல் மே 29 வரை நடைபெறவிருந்த 1435-ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் கணக்கு முடிப்பு (ஜமாபந்தி) நிர்வாக காரணங்களால் ஜூன் 16 முதல் ஜூன் 25 வரை நடைபெறும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் நேரடியாகவும், https://cmhelpline.tnega.org இணையதளம் மூலமாகவும், இ-சேவை மையங்கள் மூலமாகவும் பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம் செய்யப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு வழங்கப்படும்.