இராமநாதபுரம் மாவட்டம், கோட்டைமேடு கிராமத்தில் உள்ள கோட்டை முனீஸ்வரர் திருக்கோவிலில் 49வது மாசி களரி திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் சார்பில் 1008 பால்குடம் எடுக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மேலும், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் அழகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களையும் ஏராளமான பக்தர்கள் நிறைவேற்றினர். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.