ராமநாதபுரம்: மதியம் வரை மழை தொடரும்

374பார்த்தது
ராமநாதபுரம்: மதியம் வரை மழை தொடரும்
ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 13) மதியம் 1 மணி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி