தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், தனியார் குழுவினர் தமிழர்களின் பாரம்பரிய இசையான பறை இசைத்து, ஒயிலாட்டம் ஆடி, பாட்டு பாடி வருகின்றனர். இதனை கண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் தன்னை மறந்து அவர்களுடன் நடனமாடி மகிழ்ந்தார். அவரைத் தொடர்ந்து வட மாநில சுற்றுலா பயணிகளும் அவர்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தனர்.