ராமநாதபுரம், 11 வட்டார ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வருகிற 3-ஆம் தேதி மகளிர் வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறும். கைம்பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் பதிவு செய்யலாம். போட்டோ, ஆதார் அட்டை, ஆதரவற்ற மகளிருக்கான சான்று, குடும்ப அட்டை, கைப்பேசி கொண்டு வருவது கட்டாயம். இதன் மூலம் மகளிருக்கு வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, கடனுதவி வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.