ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை, உடைச்சியார்வலசை, மொட்டையன்வலசை பகுதியில் கேணிக்கரை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மொட்டையன்வலசை விலக்கு பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் சந்தேகப்படும்படி வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். விசாரித்த போது பையில் 4 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து உடைச்சியார்வலசையைச் சேர்ந்த முகேஷ் பாண்டியை 27, போலீசார் கைது செய்தனர்.