துபாயில் டிரைவராக வேலை பார்த்து வந்த 32 வயது செங்கோல் கனிஷ்டன், விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து மூளைச்சாவு அடைந்தார். அவரது உறவினர்களின் சம்மதத்துடன், துபாயிலேயே அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகு, அவரது உடல் நேற்று விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு, சொந்த ஊரான காரங்காடு கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கிராம மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.