ராமநாதபுரம்: குண்டூசி விழுங்கிய இளைஞர்

523பார்த்தது
ராமநாதபுரம்: குண்டூசி விழுங்கிய இளைஞர்
ராமநாதபுரம் அருகே, தங்கச் சங்கிலி, செல்போன் பறித்த வழக்கில் கைதான ஜெமினிராஜ், சிறைக்கு செல்வதை தவிர்க்க குண்டூசிகளை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முனீசுவரன் என்பவரிடம் வழிமறித்து நகை, செல்போனை பறித்ததாக ஜெமினிராஜ் மற்றும் விக்னேஷ் கைது செய்யப்பட்டனர். காவல் நிலையத்தில் இருந்த ஜெமினிராஜ், சிறைக்கு செல்வதை தவிர்ப்பதற்காக குண்டூசிகளை விழுங்கியுள்ளார். அவரை போலீசார் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி