ராமநாத சுவாமி கோவில் நடை அடைப்பு

2பார்த்தது
ராமநாதசுவாமி திருக்கோயிலில் வருகின்ற செவ்வாய்க்கிழமை, மார்ச் 3, 2026 அன்று கிரகண புண்ணிய காலத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 5 மணி முதல் 5:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து சாயரட்சை பூஜை வரை பூஜைகள் நடைபெறும். நண்பகல் 1 மணிக்கு திருக்கோவில் அடைக்கப்பட்டு, இரவு 8 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி