ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள், 4 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். இது இன்று அதிகாலை இரண்டாவது முறையாக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.