ராமேஸ்வரம் வடகாட்டு பகுதியில் நகராட்சி குப்பை கிடங்கில் குப்பைகளை முறையாக மறுசுழற்சி செய்யாமல், கிடங்குக்கு வெளியே கொட்டி தீ வைப்பதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகக் கூறி, கிராம மக்கள் நகராட்சி வாகனத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மக்களிடையே சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.