ராமேஸ்வரம்: இலங்கையில் கரை ஒதுங்கிய மீனவர் பலி

0பார்த்தது
ராமேஸ்வரம்: இலங்கையில் கரை ஒதுங்கிய மீனவர் பலி
ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் பாண்டி (60) கடல் சீற்றம் காரணமாக இலங்கையில் கரை ஒதுங்கியதால் கைது செய்யப்பட்டார். வியாழக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற இவர், பலத்த காற்றின் காரணமாக நடுக்கடலில் தத்தளித்து, சனிக்கிழமை மாலை இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் கரை ஒதுங்கினார். நெடுந்தீவு மீனவர்கள் இவரை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிபதி, ஜூன் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, மீனவர் பாண்டி சனிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டார்.